இடுக்கி அருகே காட்டு யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்தார்.

கேரளாவில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள்
குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், சொந்த விவசாய நிலத்தில் வேலைக்காக சென்ற ஷாஜி என்பவரை காட்டு யானைகள் விரட்டியதால், அவர் உயிருக்கு பயந்து அங்குமிங்கும் ஓடினர். பின்னர் அருகில் உள்ள மரத்தின் மீது ஏறியுள்ளார்.
மேலும், தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டதை அடுத்து பக்கத்து நிலத்தில் இருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். பின்னர் அவர் பத்திரமாக மரத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த செய்தியை வீடியோவில் காண :







