துரத்திய காட்டு யானைகள் – மரத்தின் மீது ஏறிய வனத்துறையினர்!

இரண்டு காட்டு யானைகள் துரத்தியதால் 5மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது ஏறிய வனத்துறையினரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் திடீரென காட்டு யானைகள் நுழைந்தன,…

இரண்டு காட்டு யானைகள் துரத்தியதால் 5மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது ஏறிய வனத்துறையினரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் திடீரென காட்டு யானைகள் நுழைந்தன, இது குறித்து பொதுமக்கள் இருட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை வெளியேற்றி விட்டு காட்டு யானைகள் கூட்டத்தை சத்தம் போட்டும், பட்டாசுகளை எறிந்தும் விரட்ட முயற்சி செய்தனர். இதில் அனைத்து யானைகளும் முன்னே சென்ற நிலையில் திடீரென இரு யானைகள் மட்டும் பின் நோக்கி வந்தன.

இதனால் உயிருக்கு அஞ்சி ஓடிய வன ஊழியர்கள் அங்கிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து உயிர் தப்பினர். தொடர்ந்து ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து நகர்ந்த பின்னரே வனத்துறையினர் மரத்தில் இருந்து கீழே இறங்கினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.