முக்கியச் செய்திகள் தமிழகம்

வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்த தாய் யானை

குட்டியுடன் சேர்ந்த தாய் யானை வனத்துறையினருக்கு நன்றி கூறிச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாகவே யானைகளின் செயல்பாடுகளும் சேட்டைகளும் இணையவாசிகளைக் பெரிதளவில் கவர்ந்து வருகிறது. பிரிந்து வரும் குட்டி யானைகளை அதன் தாயோடு சேர்த்து வைப்பது, உறங்கும் குட்டி யானைக்கு குடை பிடிப்பது போன்ற செயல்களில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவது பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அண்மையில் நீலகிரி மாவட்டத்தில் ஆற்றில் அடித்து வரப்பட்ட யானைக் குட்டியை மீட்ட வனத்துறையினர், 3 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அதன் தாயுடன் சேர்த்து வைத்தனர். தாய் மற்றும் அதன் குட்டிக்கு இடையில் நடைபெற்ற பாசப்போராட்டம், காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் உதகமண்டலம் அருகே க்ளென் ராக் வனப்பகுதியில் 3 மாத ஆண் குட்டி யானை ஒன்று அதன் தாய் யானையைப் பிரிந்து தவித்தது.
வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அதன் தாய் யானையோடு பாதுகாப்பாக சேர்த்தனர். குட்டியானையுடன் சேர்ந்த மகிழ்ச்சியில் தாய் யானை தனது துதிக்கையை உயர்த்தி நன்றி கூறும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குட்டி யானை தண்ணீர் குடித்து விளையாடும் காட்சியையும், தாய் யானை நன்றி கூறிச் செல்லும் காட்சியையும் வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவு காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முழு ஊரடங்கிற்குத் தயாராகும் மகாராஷ்டிரா மாநிலம்!

Halley Karthik

காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள்!

Halley Karthik

வெள்ள பாதிப்புகள் ஆய்வு; நாளை சென்னை வருகிறது 7 பேர் கொண்ட மத்திய குழு

Halley Karthik