அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்-இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்ந்திரனை ஓபிஎஸ் நியமித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ்…

அதிமுக அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்ந்திரனை ஓபிஎஸ் நியமித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

எடப்பாடி பழனிசாமி

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.