இன்ஸ்டாகிராமில் ஆபாச குறுஞ்செய்தி – இளைஞரை தேடி பிடித்து காலணியால் அடித்த பெண்

இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பி வாலிபரை தேடி கண்டுபிடித்து அவரை நடுரோட்டில் பெண் ஒருவர்   செருப்பால் அடித்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருபவர்…

இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பி வாலிபரை தேடி கண்டுபிடித்து அவரை நடுரோட்டில் பெண் ஒருவர்   செருப்பால் அடித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலியில் உள்ள கடை ஒன்றில் வேலை
செய்து வருபவர் கல்யாண். இன்று காலை அவர் வேலை செய்யும் கடைக்கு வந்த பெண்
ஒருவர் கல்யாணை கடையிலிருந்து வெளியில் வரவழைத்து திடீரென்று செருப்பால்
அடிக்க தொடங்கினார்.

இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த
பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர். அவர்கள் தடுத்ததையும் மீறி அந்த பெண் அவரை அடித்துக் கொண்டிருந்தார்.

இதனையும் படியுங்கள் : திருப்பதி கோயிலில் நடிகர் பிரபு குடும்பத்தோடு சாமி தரிசனம்


இதனையும் படியுங்கள்: மெரினாவில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் – மடக்கி பிடித்த போலீசார்!

அப்போது அந்த பெண் “ இவன் எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பி
இருந்தான். எனவே இவனை செருப்பால அடிக்கிறேன்”  என்று கூறி தொடர்ந்து அடித்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாசம் மெசேஜ்
அனுப்பி  பெண்ணிடம் அடிவாங்கிய  வாங்கிய கல்யாணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.