சென்னை மெரினா கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற சொகுசு கார்களை மடக்கி பிடித்து போலீஸ் அபராதம் விதித்தனர்.
இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் குவிவது வழக்கம். அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை முதல் கூட்டம் அலைமோதியது.
சிவானந்தா சாலையில் பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட கார்கள் அதிக சத்ததோடும், பொதுமக்களை அச்சுருத்தும் வகையிலும் வந்ததாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனையடுத்து போலிசார் அவர்களை மடக்கி பிடித்தனர். இதன் பின்னர் காரை ஓட்டி வந்த காரின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
லம்போர்கினி, ஃபெரார்ரி உள்ளிட்ட வெளிநாட்டு மாடல் சொகுசு கார்கள் என 5 கார்களை மடக்கி பிடித்த போலீசார் அதிவேகமாக காரை இயக்கியதாக காரின் உரிமையாளர்களுக்கு தலா.2500 அபராதம் விதித்தனர்.
இதனையும் படியுங்கள் : திருப்பதி கோயிலில் நடிகர் பிரபு குடும்பத்தோடு சாமி தரிசனம்
அதிக ஒலி எழுப்பிக் கொண்டும், அதீத வேகத்துடனும் மொத்தம் 8 கார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 3 கார்கள் ஏற்கனவே வேகமாக சென்று விட்டது. மீதமுள்ள 5 கார்களை மடக்கி அபாரதம் விதித்த போலீசார் வண்டியின் நம்பர் பிளேட்கள் முறையாக இல்லாததால் அவற்றை மாற்ற அறிவுறுத்தனர்.
– யாழன்







