திருப்பதி கோயிலில் நடிகர் பிரபு குடும்பத்தோடு சாமி தரிசனம்

பொதுமக்கள் மற்றும் குடும்பத்தார் ஆசீர்வாதத்துடன் முழு ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறேன் என திருப்பதி கோவியில் வழிபட்ட பின் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். நடிகர்கள் ஆன பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் இன்று காலை குடும்பத்துடன்…

பொதுமக்கள் மற்றும் குடும்பத்தார் ஆசீர்வாதத்துடன் முழு ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறேன் என திருப்பதி கோவியில் வழிபட்ட பின் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ஆன பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் இன்று காலை குடும்பத்துடன் திருப்பதி கோயில் சாமி தரிசனை செய்தனர்.  கோயிலில் வழிபட்ட  பின் அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டனர்.


இதனையும் படியுங்கள்: மீண்டும் களமிறங்கும் கொரோனா? கோவா சென்று வந்த திருச்சி இளைஞர் பலி.!

அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் பிரபு தெரிவித்ததாவது..

பொதுமக்கள் குடும்பத்தார் ஆகியோரின் ஆசி காரணமாக முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்”  என நடிகர் பிரபு  தெரிவித்தார்.

கடந்த பிப். 20ம் தேதி  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினை காரணமாக நடிகர் பிரபு அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு பிப்.21ம் தேதி காலை அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கும் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி முதன் முறையாக திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.