”பாரத தேசத்தை யாராலும் பிளவு படுத்த முடியாது” – சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு…!

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பேசிய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாரத தேசத்தை யாராலும் பிளவு படுத்த முடியாது என்று பேசியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது;

“புனித பாரத அண்னையின் பாதத்தை தொட்டு தொடங்குகிறேன். அப்துல் காலம் பிறந்த மண்ணில் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாத உறவை கொண்டது. அதனால் தான் காசியில் தொடங்கிய காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

நாம் நாட்டிற்கு இழுக்கு ஏற்படும் போது அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். பாரதி கண்ட கனவு பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி மேன்மையானது என கடைசி மனிதனின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் யார் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. என்றும் மக்களில் ஒருவராக உங்களில் ஒருவராக இருப்பேன். இன்றைக்கும் என்றைக்கும் பாரத தேசத்தை யாராலும் பிளவு படுத்த முடியாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.