சிறுநீரக நோய் வராமல் தடுக்க நாம் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என கட்ட குஸ்தி பட புகழ் ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் சிறுநீரக விழிப்புணர்வு வாக்கத்தான்
நடைபெற்றது. இந்த வாக்கத்தானை கட்டா குஸ்தி படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சுதாகர் சிங் தொடங்கி வைத்தார். இதில், சிறார்கள் முதியோர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உற்சாகத்துடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு வாக்கத்தானில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலக சிறுநீரக தினம் ஆண்டுதோறும் மார்ச் 9ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் உலக சிறுநீரக தினத்தையொட்டி, சிறுநீரக பாதிப்புகள் குறித்து
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை, போரூரில் உள்ள
தனியார் மருத்துவமனை சார்பாக பெசன்ட் நகர் கடற்கரையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையும் படியுங்கள் : திருப்பதி கோயிலில் நடிகர் பிரபு குடும்பத்தோடு சாமி தரிசனம்
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்ததாவது..
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு பொது மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நடையில் பங்கேற்றுள்ளேன். சிறுநீரக பாதிப்பு ஆரம்பத்தில் இருக்கும்போதே அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டு கிலோமீட்டர் வரை வரை அந்த நடை பயணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதனையும் படியுங்கள்: மெரினாவில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் – மடக்கி பிடித்த போலீசார்!
சில நேரம் நாம் நல்ல பணிகளை செய்யும்போது மற்றவர்களை விட சினிமாவில் இருப்பவர்களால் அதிக அளவில் மக்களிடம் சென்று சேர்கிறது. நான் சினிமாவில் இருந்து கொண்டே விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் கூடுதலாக மக்களிடம் பேசப்படும் என்று நினைக்கிறேன்.
சிறுநீரக நோய் தொடர்பாக நமக்கு அதிக அளவில் விழிப்புணர்வு வேண்டும். இது என்ன மாதிரி ஒரு நோய், இந்த நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னெச்சரிக்கையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒருமுறை நமக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் வந்துவிட்டால் அதற்காக செலவு செய்யும் தொகை அதிகம். அதனை நிறைய ஏழை மக்களால் செலவு செய்ய முடியாது.” என ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்தார்.
– யாழன்