”காஸா பகுதியில் உள்ளோருக்கு குடிநீரும், மின்சாரமும் தரமாட்டோம்!” – இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் பிடிவாதம்!

காஸா பகுதியில் இருப்போருக்கு மின்சாரமும், நீரும் தரப்போவதில்லை என இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தற்போது பேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகிவருகிறது.  பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ்…

காஸா பகுதியில் இருப்போருக்கு மின்சாரமும், நீரும் தரப்போவதில்லை என இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தற்போது பேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகிவருகிறது. 

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதன்பின்னர் பதிலடியாக இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.  5000க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதன் பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தில்  காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது.  இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல போர் பிரகடணம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.

ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை  7வது நாளாக தொடா்ந்து வருகிறது.

காஸா பகுதியில் முழு முற்றுகையை இஸ்ரேல் அமல்படுத்தியதில் இருந்து, அங்கு அத்தியாவசிய பொருள்களின் கையிருப்பு எப்போது இல்லாத அளவுக்கு குறைந்து வருகிறது. மேலும் உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரத்துக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது.

ஐ.நா.வி பாதுகாப்பு முகாம்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள், பெண்கள் உட்பட காசா மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். அனைவருக்கும் இடமளிக்கும் அளவுக்கு எங்களிடம் போதிய வசதிகள் இல்லை.  வெள்ளிக்கிழமையிலிருந்து உணவுப் பொருள் விநியோகத்தை உணவு ஆலைகள் நிறுத்திவிடும் அபாயம் உள்ளது” என சமீர் அப்துல் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது நஃப்தலி பென்னட்டிடம் காஸா பகுதியில் உள்ள மக்கள் மின்சாரம், உணவு, நீர் ஏதும் இல்லாமல் அவதியுறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஆவேசமாக நஃப்தலி பென்னட் பதில் அளித்ததாவது:

பாலஸ்தீன குடிமக்களை பற்றி என்னிடம் தொடர்ந்து கேட்கிறீர்கள். உங்களுக்கு என பிரச்னை? என்ன நடந்தது என்று நீங்கள் பார்க்கவில்லையா? நாங்கள் நாஜிகளுடன் போராடுகிறோம். நாங்கள் அவர்களை குறிவைக்கவில்லை. நாங்கள் எதிரிகளுக்கு மின்சாரமும், நீரும் தரப்போவதில்லை. யாரேனும் தர தயாராக இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை. இவ்வாறு நஃப்தலி பென்னட் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட நெறியாளர், “சனிக்கிழமையன்று அப்பாவி யூதர்கள் கொல்லப்பட்டது போல் அந்த அப்பாவி மக்கள் (பாலஸ்தீனியர்கள்) கொல்லப்படாமல் இருக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்.

இதற்கு ஆவேசத்துடன் பதில் அளித்த நஃப்தலி பென்னட், நாங்கள் ஹமாஸை குறிவைக்கப் போகிறோம், நீங்கள் யாரையாவது உங்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினால் அது அவர்களின் பொறுப்பு என்று கூறினார். நஃப்தலி பென்னட் பேசிய இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.