இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் காசாவின் வெற்றி என வானவேடிக்கையுடன் கொண்டாடப்பட்டதா?

This News Fact Checked by ‘AajTak’ இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் காசாவிற்கு கிடைத்த வெற்றி எனக்கூறி பெரிய அளவில் வானவேடிக்கை நடத்தி கொண்டாடியதாக வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த…

Was the Israel-Hamas ceasefire celebrated with fireworks as a victory for Gaza?

This News Fact Checked by ‘AajTak

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் காசாவிற்கு கிடைத்த வெற்றி எனக்கூறி பெரிய அளவில் வானவேடிக்கை நடத்தி கொண்டாடியதாக வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதன் மூலம் இது தொடங்கியது. பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தது.

சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் இந்த போர் நிறுத்தத்தை காசாவிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கின்றனர். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் மிகப்பெரிய பட்டாசுகள் தெரியும். இந்த வீடியோ ஒரு உயரமான மலை அல்லது கட்டிடத்தில் இருந்து படமாக்கப்பட்டுள்ளது, முழு நகரமும் கீழே பிரகாசிக்கிறது.

காஸா போரில் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் வெடிக்கப்பட்ட பட்டாசை ஏமன் தலைநகர் சனாவில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.