விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் : அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை – நீதிபதிகள்……..!

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை சம்பவம் தொடர்பாக தொடர்பான வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி ஒருவர், கடந்த 10-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிவர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து குளத்தூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். நேற்றும் 5-வது நாளாக மாணவியின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதற்கிடையே மாணவி கொலை வழக்கை தீவிரமாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி என்பவர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், சந்தேகத்திற்கிடமானவர்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சந்தேகத்திற்கு உரியவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செல்போன் டவர் மூலம் 1,600 செல்போன்கள் பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றோம். 212 நபர்கள் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளோம் என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சமூக ஊடகங்களில் வழக்கை விசாரணை செய்வதற்கு அழுத்தம் கொடுக்க கூடாது. வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அறிவியல் முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் அவர்கள் மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.