தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ் நாட்டின் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தலை நடத்தி முடித்திட இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழ் நாட்டில் ஏப்ரல் 23 ஆம் ஒரே கட்டமாக் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மேலும் அவர் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தேர்தலில் போட்டியிடுவோர் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் ஏப்ரல் 7 ஆம் தேதி மனுக்கல் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 9 ஆம் தேதி கடை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான தேதி அறிவிக்கபட்டது முதலம் மாநிலம் முழுவதும் தேர்தல் விதி அமலுக்கு வருகின்றன.
தமிழ் நாட்டை போன்று புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, தமிழ் நாட்டை போல அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகின்றன.








