தமிழக காவலர்கள் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!

குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு நாடு முழுவதும் 746 விருதுகள், 95 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட 21 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. வீர, தீர செயலுக்கான விருது ஜஜி துரைக்குமார் மற்றும் ராதிகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெருபவர்களின் பட்டியல் 

ஹெச். ஜெயலக்ஷ்மி – காவல் கண்காணிப்பாளர்
ஜி. ஸ்டாலின் – காவல் கண்காணிப்பாளர்
எஸ். தினகரன் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
ஆர். மதியழகன் – துணை காவல் கண்காணிப்பாளர்
டி. பிரபாகரன் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
ஏ. வீரபாண்டி – துணை காவல் ஆணையர்
எம். பாபு- துணை காவல் கண்காணிப்பாளர்
பி. சந்திரசேகரன் – துணை காவல் கண்காணிப்பாளர்
டி.ஹெச். கணேஷ் – துணை காவல் ஆணையர்
ஜெ. ஜெடிடியா – துணை காவல் கண்காணிப்பாளர்
ஜெ.பி. பிரபாகர் – காவல் கண்காணிப்பாளர்
ஜெ. பிரதாப் பிரேம்குமார் – காவல் உதவி ஆணையர்
என். தென்னரசு – காவல் உதவி ஆணையர்
கே. வேலு – துணை காவல் கண்காணிப்பாளர்
எஸ். அகிலா – காவல் ஆய்வாளர்
எம். குமார் – காவல் ஆய்வாளர்
எஸ். அசோகன் – Deputy Commandant
வி. சுரேஷ்குமார் – Assistant Commandant

எம். விஜயலக்ஷமி – காவல் ஆய்வாளர்

எம்.சி.சிவக்குமார் – துணை ஆய்வாளர்
ஆர். குமார் – துணை ஆய்வாளர்

ஏ.டி. துரைக்குமார் – காவல் துறைத்தலைவர்
ஏ. ராதிகா – காவல் துறைத்தலைவர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.