“ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞன் விஜயகாந்த்!” – நடிகர் சூர்யா காணொலி வெளியிட்டு இரங்கல்!

ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞன் விஜயகாந்த் என காணொலி வெளியிட்டு இரங்கள் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல்…

ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞன் விஜயகாந்த் என காணொலி வெளியிட்டு இரங்கள் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது.  இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும்,  தமிழ் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.  முக்கியமாக, பல துணை நடிகர்கள் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு காணொலியையும் இணைத்துள்ளார்.

அந்த பதிவில் நடிகர் சூர்யா கூறியுள்ளதாவது:

அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!

என்று பதிவிட்டுள்ளார். மேலும் காணொலியில்

அண்ணன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமாக உள்ளது. ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞன் அவர். கடைகோடி மக்கள் வரையில் எல்லார்க்கும் எல்லா உதவிகளும் செய்து, புரட்சி கலைஞனா, கேப்டனா நம்ம எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சவர். அண்ணன் விஜயகாந்தோடு ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன். அவரது குடும்பத்தார்க்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

https://twitter.com/Suriya_offl/status/1740361146907893796?t=mFeRUl85p3lTtYOwOpCOyw&s=19

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.