வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறையூர் வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கு விசாரணையின் நிலை குறித்து புதுக்கோட்டையில் சிபிசிஐடி தனிப்படையினரிடம் சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து தரப்பு மக்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய தில்லை நடராஜன், குற்றவாளிகளை விரைவில் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டியில் மனித கழிவுகள் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஏற்கனவே திருச்சி சி பி சி ஐ டி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 பேர் கொண்ட 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். நேற்று வரை 60 நபர்களிடம் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று சிபிசிஐடி எஸ் பி தில்லை நடராஜன் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டிஎஸ்பி பால்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகளோடு எஸ் பி தில்லை நடராஜன் ஆய்வு
மேற்கொண்டு நான்கு தினங்களாக நடைபெற்று வரும் விசாரணையின் நிலைகுறித்து
கேட்டறிந்ததோடு அனைத்து தரப்பு மக்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியோடு குற்றவாளிகள் விரைவில் பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்
இந்த நிலையில் இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக
சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.