முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திரிபுராவில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ள திரிபுரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது.

2023ம் ஆண்டில்  நடைபெற உள்ள  சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 18ம் தேதி வெளியிட்டார். மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலத்தில் கடந்த  2018ம் ஆண்டு தேர்தல் நடைபெற்று மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வருகிற மார்ச் மாதத்தோடு மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலத்தில் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் அதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதனடிப்படையில் பிப்ரவரி 16ம் தேதி திரிபுராவிலும், பிப்ரவரி 27ம் தேதி மேகாலயா மற்றும் நாகலாந்து தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

பிப்ரவரி 16ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள திரிபுராவில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைகிறது.  31ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.  மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 2.ம் தேதி கடைசி நாளாகும்.

அதேபோல பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள மேகலயா மற்றும் நாகலாந்தில்  வேட்புமனு தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி முடிவடைகிறது. திரிபுரா மேகாலயா நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களும் தலா 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளன. முதலாவதாக தற்போது மூன்று வட கிழக்கு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வடகிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலுக்காக மொத்தம் 9125 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைக்கிறது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி

Halley Karthik

முல்லை பெரியாறு தொடர்புடைய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

G SaravanaKumar

இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது – லாவ் அகர்வால்

Jeba Arul Robinson