புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அரசு

டெல்லியில் அமைந்து வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ்…

டெல்லியில் அமைந்து வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. புதிய நாடாளுமன்ற கட்டடத்துடன் ராஜபாதை சீரமைப்பு, துணை குடியரசு தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் என பலவற்றையும் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய கட்டடம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று தகவல்கள் தெவிக்கின்றன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி புதிய கட்டடத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய புதிய கட்டிடத்தில் எம்பிக்கள் ஓய்வெடுக்க அறை, நூலகம், உணவு அருந்தும் பகுதி, வாகன நிறுத்தம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்டடத்தின் மாதிரி வரைபடங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.