“இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி!

ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன்,  வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி…

ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன்,  வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதில் 3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது.  இதனையடுத்து 4-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  ஆந்திராவின் 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 தொகுதிகளுக்கும் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

இதனையொட்டி,  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும்,  காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  மேலும் அதானி,  அம்பானி குறித்தும் பெரும் வார்த்தை போர் இருதரப்பினரிடையே நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்,  இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் இந்தியாவில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“இந்திய நாட்டின் இளைஞர்களே,

ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும்,  வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும்.  பிரதமர் மோடி 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என கூறினார்.  ஆனால் அது பொய்யாகிவிட்டது. பிரதமர் பதவி தன் கையை விட்டுப் போகிறது என்ற பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்.  அவரின் பொய் பிரச்சாரங்களில் கவனத்தை செலுத்தாமல்,  உங்களின் பிரச்னைகளில் உறுதியாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.