பெண் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சொமேட்டோ சிஇஓ!

தனது நிறுவனத்தில் 10 ஆண்டுகாலமாக பணிபுரியும் ஊழியரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சொமேட்டோ சிஊஓ. இந்தியாவின் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான சோமாட்டோ, அன்னையர் தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சமான “போட்டோ…

தனது நிறுவனத்தில் 10 ஆண்டுகாலமாக பணிபுரியும் ஊழியரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சொமேட்டோ சிஊஓ.

இந்தியாவின் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான சோமாட்டோ, அன்னையர் தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சமான “போட்டோ கேக்” தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.  இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விருப்பதிற்கேற்ப தங்களது புகை படங்களை அதில் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த புதிய அம்சத்தை சோமாட்டோவின் சிஇஓ தீபிந்தர் கோயல் அறிமுகப்படுத்தினார்.

இதையும் படியுங்கள் :  மேற்குவங்கத்தை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு! – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிரான புகாரை திரும்ப பெற்ற பெண்!

இதையடுத்து,  ஆர்டர் செய்த கேக் பயனர்களுக்கு அரை மணி நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும், அன்னையர் தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்ட “போட்டோ கேக்”  அம்சத்தை பயன்படுத்தி அன்று ஒரு நிமிடத்திற்கு 150 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சோமாட்டோவின் சிஇஓ தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியரின் 10 ஆண்டு கால நிறைவையொட்டி,  “போட்டோ கேக்” செய்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.  மேலும் அவரே அந்த கேக்கை ஊழியருக்கு டெலிவரி செய்தார். இது தொடர்பாக சோமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது :

“சோமாட்டோவில் 10 ஆண்டுகள் முடித்த ஆஷ்னாவை வாழ்த்துவதற்காக  “போட்டோ கேக்”  என்னும் புதிய அம்சத்தை பயன்படுத்தி அவருக்கு பரிசளித்தோம்.  அவர் தனது 20 வயதில் சோமாட்டோவில் சேர்ந்தார்.  இப்போது சோமாட்டோவில் HR குழுவுக்கு இணை தலைமை தாங்குகிறார்.  அன்னையர் தினத்திற்காக அறிமுகப்படுத்திய இந்த அம்சத்தை எங்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றிய எங்கள் உணவக உரிமையாளர்களுக்கு மிக்க நன்றி”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.