மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக் தாக்கூரை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
இன்று சென்னையில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் நேற்று சென்னை வந்தடைந்தார். இந்த நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சரை சந்தித்து வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது Sports Authority of India என்ற விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தென் இந்திய கிளை தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டும் எனவும், கேலோ இந்தியா உள்கட்டமைப்பு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் ஏசியன் பீச் கேம்ஸ் விளையாட்டுகளை நடத்த வேண்டும் உள்ளிட்ட விளையாட்டு துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உதயநிதி ஸ்டாலின் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் முன்வைத்துள்ளார்.
சென்னைக்கு வருகை தந்துள்ள ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் @ianuragthakur அவர்களை அன்போடு வரவேற்றோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி கூறினோம். 1/2 pic.twitter.com/URa0pLe8ak
— Udhay (@Udhaystalin) March 18, 2023
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
சென்னைக்கு வருகை தந்துள்ள ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை அன்போடு வரவேற்றோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி கூறினோம்.
Sports Authority of India வின் தென்னிந்தியக் கிளை தமிழ்நாட்டில் வேண்டும். கேலோ இந்தியா உள்கட்டமைப்பு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டில் ஏசியன் பீச் கேம்ஸ் விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.” என தெரிவித்துள்ளார்.