நடிகர் தனுஷ் கூட்டணியில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “புதுப்பேட்டை.”செல்வராகவன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ஸ்னேகா, சோனியா அகர்வால், நிதிஷ் வீரா மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
வெளியான நேரத்தில் வசூல் மற்றும் விமர்சனரீதியாக சரிவர அமையவில்லை என்றாலும் புதுப்பேட்டை திரைப்படம் காலப்போக்கில் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.
நீண்ட காலமாகவே புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான எதிர்ப்பார்ப்பு இருந்த வந்தது. இது குறித்தான ரசிகர்களின் கேள்விகளுக்கும் இயக்குநர் செல்வராகவனும் ஆதரவாகவே கருத்து தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், புதுப்பேட்டை 2 திரைப்படத்தை எழுதி முடித்துவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Phew ! Finished writing pudhupettai 2
— selvaraghavan (@selvaraghavan) March 19, 2026







