Short Film to Mass Film: கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்

கார்த்திக் சுப்பராஜ் இதுவரை 7 படங்களையும், 3 வெப் சீரிஸ்களையும் இயக்கி  பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இவரின் பிறந்தநாளான இன்று அவரின் திரைப் பயணம் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம்.  ஒரு கதாநாயகன்தான்…

கார்த்திக் சுப்பராஜ் இதுவரை 7 படங்களையும், 3 வெப் சீரிஸ்களையும் இயக்கி  பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இவரின் பிறந்தநாளான இன்று அவரின் திரைப் பயணம் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம். 

ஒரு கதாநாயகன்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர்கள் நினைத்த காலக்கட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ், அட்டகாசமான வில்லன் கதாபாத்திரத்தை ’ஜிகிர்தண்டா’வில் வடிவமைத்திருந்தார்.

அதிகமாக கொண்டாடப்பட்ட பீட்சா படத்தைப்பற்றி பேசுவதைவிட ’இறைவி’யில் கார்த்திக் சுப்புராஜ் முதிர்ச்சியான கதை களத்தை கையாண்டார். பெண் தெய்வங்களும், பெண்களும் எப்படி ஆண்களால் வதைக்கப்படுகிறார்கள் என்றே கதை நகரும்.

ஒரு தோற்றுப் போன இயக்குநரின் வலியை, குடிபோதைக்கு அடிமையான இயக்குநரை சகித்து வாழும் மனைவி கதாபாத்திரம். பல கணவுகளுடன் விஜய் சேதுபதுபதியை திருமணம் செய்யும் அஞ்சலி கதாபாத்திரம். மீண்டும் திரும்பும் கோவலனை, கண்ணகி ஏன் ஏற்றுகொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும். வாழ்நாள் முழுவதும் தனது கணவருக்கு சமைத்து கொண்டே இருக்கும் தாயான வடிவுகரசியிடம் பாபி சிம்ஹா பேசும் வசனங்கள் எதார்த்த உண்மைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

இறுதியாக எஸ்.ஜே சூர்யா பேசும் வசனத்தில் கண்ணீர் வடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. இது ஆண் உலகத்தின் குற்றங்களை உணர்த்தும் படமாக அமைந்தது. ரஜினியின்’ பேட்ட’படத்தில் நவாஸுதீன் சித்திக்கை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்,
கார்த்திக் சுப்புராஜ்.

அதன் பின் கார்ச்ச்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாப படம்  மெர்குரி. பார்வையற்ற ஒருத்தர்., 5 வாய்பேச இயலாத , செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளின் அஜாக்கிரதையால் அகால மரணமடைகிறார். அந்த பார்வையற்றவரின் ஆன்மா அந்த 5 பேரையும் எப்படி பழி வாங்குகிறது? என்பதும் ., இவர்களில் பார்வையற்றவர் அப்பகுதியில் இயங்கி வந்த மெர்குரி (பாதரசம்) ஆலை கழிவினால் பாதிக்கப்பட்டு மாற்று திறனாளி… ஆனவர் என்பதும்தான் ” மெர்குரி ” படத்தின் கருவாகும்.

அடுத்து பேட்ட படத்தில் 90களின் ரஜினியை மீண்டும் ரசிகர்களுக்குக் காட்டிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதியைவிட சிறப்பானது. படத்தின் துவக்கத்தில் கதவைத் திறந்துகொண்டு நுழையும் ரஜினி, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அதிரடியாகப் பாய்வார்கள். இடைவேளைவரை இந்தப் பாய்ச்சல் தொடரரும். ரஜினி நடித்து சமீபத்தில் வந்த திரைப்படங்களில் இந்த அதிரடியும் பாய்ச்சலும் ‘மிஸ்’ ஆகியிருந்த நிலையில், இந்த காட்சிகள் அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்திற்குள்ளாக்கியது. ரஜினிக்கும் சிம்ரனுக்கும் இடையிலான காட்சியில், இருவருமே போட்டிபோட்டுக்கொண்டு மனம் கவர்ந்தன.

இதையடுத்து ’ஜகமே தந்திரம்’ படத்திற்கு செல்வோம். நடிகர் தனுஷின் மற்ற படங்களை ஒப்பிடக்கூடாது. இது ஒரு தனித்துவமான திரைப்படம் என்று சொல்ல நினைத்தாலும் கூட சொல்லமுடியாத ஒரு திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் படம் என்றால், அவரே நம்புவாரா? தெரியவில்லை. நாடகப் பாணி திரைக்கதையைத் தவிர்த்த இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக். கர்ணன் படத்திருக்கு பிறகு, இப்படியொரு படம் தனுஷ்க்கு கிடைத்திருப்பது சறுக்கல் என்றே சொல்லலாம்.

அதன் பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு சியான் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார் துருவ் விக்ரம். வெறித்தனமான நடிப்பை காட்டி மிரட்டினாலும், அந்த படம் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், பெரிதாக எடுபடவில்லை.

இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

’அசால்ட் சேது’ என்ற பெயரில், ஜிகர்தண்டா படத்தில் தோன்றிய பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த கதாபாத்திரத்திற்காக 2014ஆம் ஆண்டு தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். சந்தோஷ் நாராயணனின் மிரட்டல் இசையில் உருவான இப்படத்தின் பிஜிஎம், இன்றும் பலரது ரிங்டோனில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு அங்கமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின், இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் வெளியிட்டார். இந்நிலையில் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மோதிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள காட்சிகள், புல்லரிப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.