சோபி டிவினியின் அதிரடியான ஆட்டத்தால் குஜராத் அணியை பெங்களூரு அணி எளிதில் வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 188ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் லாரா ஆல்வர்ட் 68 ரன்கள் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் 41 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியின் ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி ஆட்டத்தை துவங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனா மற்றும் சோபி டிவினி ஆகியோர் களமிறங்கினர். மந்தனா 37 ரன்னில் எடுத்த நிலையில் ஸ்னேஹ் ரானாவின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையும் படியுங்கள்: சிஎஸ்கே இல்லை.. ஆர்சிபி தான் – ஶ்ரீசாந்த் ஆசை
இதன் பின்னர் களமிறங்கிய பெரியுடன் ஜோடி சேர்ந்த சோபி டிவினி அதிரடியாக ஆடி சிக்சர்களும் பவுண்டரிகளுமாக பறக்க விட்டார். 36 பந்துகளில் 8 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் விளாசிய சோபி டிவினி 99 ரன்னில் கிம் ஹர்த் வீசிய பந்தில் பவுண்டரி விளாச முயற்சித்தபோது அஸ்வினியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சோபி டிவினி சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பெரியுடன் ஜோடி சேர்ந்த ஹீதர் நைட் நிதானமாக விளையாடினர். 15.3 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழந்து வெற்றி வாகை சூடியது பெங்களூர் அணி. இது பெஙகளூர் அணி பெறும் இரண்டாவது வெற்றியாகும்.
மும்பையில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ், 5 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி தனது முதல் தோல்வியை சந்தித்தது.