#IPL2026 ; சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி – தொடரிலிருந்து விலகும் நேதன் எல்லிஸ்….!

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

19 வது ஐபிஎல் தொடரானது வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் , இந்த நிலையில், சென்னை அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் எல்லிஸ்-க்கு தொடையில் ஏற்பட்ட (hamstring) காயம் காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்வடைவாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2026-ல் சென்னை அணியானது மார்ச் 30 கவுகாத்தியில் நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.