முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: டி.ஆர்.பாலு

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடாரம் அமைத்து புதிதாக அமைக்கப்பட்ட 150 ஆக்சிஜன் வசதியுடன் கொண்ட படுக்கைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். அவருடன் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்திற்கு குத்தைகைக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக பேசினார். “செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு 700 கோடி செலவு செய்து அனுமதி அளிக்காதது கிணத்தில் போட்ட பணத்திற்கு சமம்” என்று குற்றம்சாட்டினார். 

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மத்திய அரசிடன் தெரு சண்டை போடமுடியாது எனவும்,  தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளும், முதல்வரும் தொடர்ந்து மத்திய அரசிடம் பேசி வருகின்றனர் என்றும் விளக்கினார் டி.ஆர்.பாலு. 

Advertisement:

Related posts

திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது: முதல்வர் விமர்சனம்

Gayathri Venkatesan

ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!

Niruban Chakkaaravarthi