தளர்வில்லா ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 2020-21ம் கல்வி ஆண்டில் அரசு, தனியார் என அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எந்த மாணவர்களையும் தேக்க நிலையில் வைக்க கூடாது எனவும், இதேபோன்று எந்த மாணவர்களையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களது தேர்ச்சி பதிவேட்டில் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 9 மற்றும் 10,11ம் வகுப்பு மாணவர்களும் பொது தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்குவது குறித்து பள்ளிகள் திறந்த பிறகு முடிவு செய்யப்படும் எனவும் தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.