முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனாவால் 1,700 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: குழந்தைகள் ஆணையம்

நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பால் ஆயிரத்து 700 குழந்தைகள் பெற்றொரை இழந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில், கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பால் 1,700 குழந்தைகள் பெற்றொரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 400 ஆக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிகக்கை குறித்து மாநில அரசுகள், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement:

Related posts

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!

Jayapriya

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது!

Jeba

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

Jeba