தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நலவாரியம் ஏற்படுத்தப்படும்:டிடிவி தினகரன்!

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், நலவாரியம் ஏற்படுத்தப்படும் என தேர்தல் பரப்புரையின் போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்…

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், நலவாரியம் ஏற்படுத்தப்படும் என தேர்தல் பரப்புரையின் போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் செல்வராஜை ஆதரித்து, பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன், தாங்கள் வெற்றி பெற்றால், சட்டத்திற்கு உட்பட்டு மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரி திறக்கப்படும் எனவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறினார். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த, வெள்ளலூர் நாடு, அ.வல்லாளபட்டி மற்றும் மேலூர் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அரசின் சார்பில் நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்படும் எனக் கூறிய டிடிவி தினகரன், கொட்டாம்பட்டி பகுதியில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நலவாரியம் ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.