ஆங்கில புத்தாண்டு 2026 : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…!

2026 ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழு​வதும் நேற்று இரவு புத்​தாண்டு கொண்​டாட்​டம் களை​கட்​டியது. பட்​டாசு வெடித்​தும், ஒரு​வருக்​கொரு​வர் வாழ்த்​துகளைத் தெரி​வித்​தும் புத்​தாண்​டைக் கொண்​டாடினர். புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு: இந்த புத்​தாண்டு புதிய சக்தி மற்​றும் நேர்​மறை​யான மாற்​றத்​தின் அடை​யாள​மாக இருக்​கட்​டும். சுயபரிசீலனை மற்​றும் புதிய தீர்​மானங்​கள் எடுக்​க​வும் இது நல்ல வாய்ப்​பு. இந்​நாளில், நாட்​டின் வளர்ச்​சி, சமூக நல்​லிணக்​கம் மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு ஆகிய​வற்​றுக்கு நமது உறு​திப்​பாட்டை வலுப்​படுத்​து​வோம். 2026 புத்​தாண்டு நமது வாழ்​வில் அமை​தி, மகிழ்ச்​சி, செழிப்​பைக் கொண்டு வந்​து, வலு​வான மற்​றும் செழிப்​பான இந்​தி​யாவை உரு​வாக்க புதிய சக்​தியை அளிக்​கட்​டும்.

பிரதமர் மோடி : அனைவருக்கும் ஒரு அற்புதமான 2026 ஆம் ஆண்டு அமைய வாழ்த்துகிறேன். வரவிருக்கும் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் நிறைவும் கிடைக்கட்டும். நமது சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவப் பிரார்த்திக்கிறோம்.

ராகுல் காந்தி : உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2026 நல்வாழ்த்துக்கள்!

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: 2026 விடியல், புதுப்​பிக்​கப்​பட்ட நம்​பிக்கை மற்​றும் வலுப்​படுத்​தப்​பட்ட உறு​தியை அறி​முகப்​படுத்​தட்​டும். நம் வாழ்​வில் மகிழ்ச்​சி, நல்ல ஆரோக்​கி​யம் மற்​றும் செழிப்பை நிரப்​பட்​டும். நிலை​யான மற்​றும் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை உரு​வாக்க ஒன்​றாக முன்​னேறு​வோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின்: தமிழகத்​துக்கு வெற்​றிகர​மான ஆண்​டாக அமைந்த 2025-க்கு விடை​கொடுத்​து, மாபெரும் வெற்​றியை வழங்​க​வுள்ள 2026-ல் அடி​யெடுத்து வைக்​கத் தயா​ராகிறோம். 2030-க்​குள் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம் எனும் நம் கனவு இந்த ஆண்​டில் வலுப்​படும். தமிழகம் யாருக்​கும் தலைகுனி​யாது, தொடர்ந்து போராடும். இது​வரை பெற்ற வெற்​றிகள் தந்த ஊக்​கத்​துடன் 2026-ல் மாபெரும் வெற்​றியை நோக்கி முன்​செல்​கிறோம். அமை​தி​யும், நல்​லிணக்​க​மும், மகிழ்ச்​சி​யும், புதிய வெற்​றிகளும் நிறைந்த ஏற்​றமிகு ஆண்​டாக புத்​தாண்டு அமைய அனை​வருக்​கும் நல் வாழ்த்​துகள்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: ஆங்​கிலப் புத்​தாண்டு தமிழக மக்​களுக்கு நிறை​வான மகிழ்ச்​சி​யை​யும், தித்​திக்​கும் நிகழ்​வு​களை​யும், நிறைந்த செல்​வத்​தை​யும், நீடித்த ஆயுளை​யும், நிம்​ம​தி​யான வாழ்க்​கை​யை​யும் வழங்​கும் ஆண்​டாக அமையட்​டும்.

தவெக தலைவர் விஜய் : தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம். புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம். வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது. வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது. வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று இப்புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் ஒளிமிக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

இதே​போல, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, பாமக நிறு​வனர் ராம​தாஸ், பாமக தலை​வர் அன்​புமணி ராமதாஸ், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்,உள்​ளிட்​டோரும்​ புத்​தாண்​டு வாழ்​த்​து களைத்​ தெரிவித்​துள்​ளனர்​.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.