உலகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் புத்தாண்டைக் கொண்டாடினர். புத்தாண்டையொட்டி பல்வேறு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் ’ஜன நாயகன்’ படக்குழுவும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரேமலூ புகழ் மமிதா பைஜூ, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.








