ரஜினி, கமல் புத்தாண்டு வாழ்த்து….!

நடிகர்கள் ரஜினி காந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழு​வதும் நேற்று இரவு புத்​தாண்டு கொண்​டாட்​டம் களை​கட்​டியது. பட்​டாசு வெடித்​தும், ஒரு​வருக்​கொரு​வர் வாழ்த்​துகளைத் தெரி​வித்​தும் புத்​தாண்​டைக் கொண்​டாடினர். புத்தாண்டையொட்டி பல்வேறு  திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் வந்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்தபிறகு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். மேலும் தான் நடித்த ‘முத்து’ படத்தில் உள்ள வசனத்தைப் பகிர்ந்து ரஜினி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

”நம் முன்னால் ஒரு புதிய ஆண்டு காத்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை விடச் சிறந்தவராகவும், கருணையுள்ளவராகவும், ஞானமுள்ளவராகவும் ஆவதற்கு இது மற்றொரு வாய்ப்பு. சிறந்து விளங்குவது என்பது தொடர்ச்சியான ஒரு செயல்முறை. இந்த புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.