திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதும் புனித தலங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூண்டியில் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தான் வெற்றி பெற்றதும் பொதுமக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வேன் எனத் தெரிவித்தார். சாலை வசதிகள் செய்யப்பட்டு கல்லணை பூண்டி தேவாலயம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.







