மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கச்சத் தீவுக்கு…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கச்சத் தீவுக்கு அருகே மீன் பிடிக்க சென்றிருந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தார்.

தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது மற்றும் சிறைபிடிக்கப்படுவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு தமிழகம் கொணரவும், இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் கோரியிருந்தார். இதையடுத்து, வரும் திங்கள்கிழமை, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.