200 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெறும்: உதயநிதி ஸ்டாலின்!

200 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெறும், என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதியை ஆதரித்து, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொன்னமராவதியில்…

200 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெறும், என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதியை ஆதரித்து, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொன்னமராவதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார். மேலும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும், என தெரிவித்தார்.

மாணவர்கள் மருத்ததுவம் படிக்க ஆசைப்பட்டது தவறா, நீட் தேர்வினால் மருத்துவ படிப்பினை படிக்க இயலாமல் இதுவரை 14 பேர் உயிரிழப்பு கொண்டுள்ளனர் என தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.