முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

எகிப்தில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்து: 32 பேர் பலி

எகிப்தில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 165 பேர் படுகாயம் அடைந்தனர்.

எக்ப்தின் லக்சர் நகரத்திலிருந்து புறப்பட்ட ரயிலும் அலக்ஸ்ஸாண்டிரா என்ற இடத்திலிருந்து புறப்பட்ட ரயிலும் சோஹக் மாகாணத்தின் தஹ்தா என்ற நகரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் மேலும் 165 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல 70 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

ரயிலில் அவசர காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் பிரேக்கை மர்ம நபர்கள் இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தின் ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி இந்த விபத்து தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ’இந்த விபத்து அலட்சியம் அல்லது ஊழல் போன்ற காரணங்களுக்காக நடந்திருக்கலாம். அது எப்படியாக இருந்தாலும் சம்மந்தபட்டவர்கள் மீது நேரம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

அந்நாட்டு பிரதமர் முஸ்தபா மட்பொலி விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். எகிப்தில் தொடர்ந்து ரயில் விபத்துகள் நடந்து வருகிறது. ரயில்களை முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதால் பல ரயில் விபத்துகள் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுபோல் கடந்த 2020யில் நடந்த ரயில் விபத்தில் 373 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை கொலை செய்த மகள்!

Jeba Arul Robinson

பேருந்தில் எச்சில் தொட்டு டிக்கெட்- நடத்துநருக்கு கொரோனா டெஸ்ட்

Ezhilarasan

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வது எப்போது?

Halley karthi