ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 36 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மூவாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு…

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 36 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மூவாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தி வலைகளை வெட்டியும் தாக்குதல் நடத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். நான்கு விசைப்படகையும் அதில் இருந்த 29 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகம் அழைத்து சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியை சேர்ந்த ஒரு படகும் அதில் இருந்த 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply