முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்களிக்கும்போது முககவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் நாளை வாக்குபதிவு மையங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்து வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனா காலத்தில் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சுகாதாரத்துறை செயல்பட்டு வருவதாக கூறினார். வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாக்குச் சாவடி மையங்களை சுத்தம் செய்யப்பட்டுள்தாகவும், வாக்குச் சாவடி மையங்களில், முகக்கவசம், கிருமிநாசினி, வெப்பநிலை பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


வாக்காளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்து வாக்குப் பதிவு செய்ய வேண்டும். வாக்குச் சாவடி மையங்களில் தனிமனித இடைவெளியைப் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்குவருகிறது. நேற்று ஒருநாளில் 3,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் வீடு வீடாக சென்று உடல்பரிசோதனை செய்யும் பணி வரும் 7ம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் சரிபார்க்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்

தமிழகத்திற்கு 54 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.இதுவரை 15-ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும். ஒருசிலருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த எண்ணிக்கை வெறும் குறைவு. மேலும் இதேபோல் பாதிக்கப்படும் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு வெகு குறைவாகவே உள்ளது” என மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram