அகில இந்திய அளவில் பாஜகவை அகற்ற கூடிய ஒன்றாக, இந்த சட்டமன்ற தேர்தல் அமையும் என டி.ராஜா தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மோடி அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் வருகை அவர்களின் விரக்தியை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டம் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரித்து , பாஜகவுக்கு அதிமுக ஆதரவாக நிற்பதாகவும், திமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றும், டி.ராஜா தெரிவித்தார்.







