திமுக ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: திருச்சி சிவா

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர்…

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பசுபதிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், “மத்திய பாஜக அரசு மக்களுக்குப் பாதகமான சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று லட்சம் பணியிடங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்றும் திருச்சி சிவா உறுதி அளித்தார்.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.