கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 56,211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 நேரத்தில் நாடு முழுவதும் 56,211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 271 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,20,95,855 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,13,93,021 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 5,40,720 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 7,85,864 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24,26,50,025 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 6,11,13,354 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது வரை 1,62,114 பேர் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







