“ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் தமிழக மக்களுக்கு நன்மை” வைகோ

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து…

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய வைகோ, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்றார். தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு அநீதிகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் நியாயம் கிடைக்கும் என்பதால், மக்கள் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும், என்றும் வைகோ தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.