மர்மமான முறையில் வாலிபர் மரணம்!

இராஜபாளையம் பகுதியில் அட்டை கம்பெனியில் வேலை செய்யும் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் இராஜபாளையம் – தென்காசி சாலையில்…

இராஜபாளையம் பகுதியில் அட்டை கம்பெனியில் வேலை செய்யும் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் இராஜபாளையம் – தென்காசி சாலையில் உள்ள தனியார் அட்டை தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் கீழே தவறி விழுந்து விட்டதாகவும், உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக சிதம்பரத்தின் உறவினர்களுக்கு கம்பெனி ஊழியர்கள் தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்ற பார்த்தப்போது அங்கு சிதம்பரம் சிகிச்சை பெறவில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது இறந்த நிலையில் சிதம்பரத்தின் உடல் அவரது வீட்டில் கிடத்தப்பட்டிருந்தது. சிதம்பரத்தின் உடலை கம்பெனி ஊழியர்கள் வீட்டில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

சிதம்பரம் உயிரிழந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில்,
உண்மையை மறைக்கும் கம்பெனி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உறவினர்கள் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.