முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

அதிமுக – திமுக நேரடியாக எத்தனை இடங்களில் மோதுகின்றன!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக – திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை இடங்களில் மோதுகின்றன என்பதை முழுமையாக தெரிந்துகொள்வோம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக -திமுக கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுக-திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே, 131 தொகுதிகளில் நேருக்குநேர் எதிர்த்து போட்டியிடுகின்றன.

அதிமுக – காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது

அதிமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளிலும் நேரடியாக மோதுகின்றன.

அதிமுகவை 5 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து களம் காண்கிறது.

அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.

அதிமுக மற்றும் மதிமுக வேட்பாளர்கள் 6 தொகுதிகளிலும் எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

அதிமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் மோதுகின்றனர்.

அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து முஸ்லிம் லீக் கட்சி 3 இடங்களில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

அதிமுகவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், அதிமுகவை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.

இதேபோன்று, ஆதித்தமிழர் பேரவை, ஃபார்வார்டு பிளாக் கட்சி, மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தலா ஒரு இடங்களில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகின்றன.

திமுக கூட்டணியை பொறுத்தவரை

அதிமுகவை 131 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் நேருக்குநேர் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியுடன் 18 தொகுதிகளில் திமுக தேர்தல் யுத்தத்தில் களமிறங்கியுள்ளது.

பாஜகவுடன் 14 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸுடன் 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் மோதுகின்றனர்.

அதிமுக கூட்டணி கட்சிகளான பெருந்தலைவர் மக்கள் கட்சியுடன் ஒரு இடத்திலும், புரட்சி பாரதம் கட்சியுடன் ஒரு தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் ஒரு தொகுதியிலும் திமுக எதிர்த்து களமிறங்கியுள்ளது.

இதேபோன்று, மூவேந்தர் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி, பசும்பொன் தேசிய கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தலா ஒரு இடங்களையும் திமுக எதிர்கொள்கிறது.

தேசிய கட்சிகளான காங்கிரஸ்-பாஜக ஆகியவை 5தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன.

காங்கிரஸ் -பாமகவுடன் 3 தொகுதிகளில் பலப்பரீட்சை நடத்துகிறது.

காங்கிரஸ் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் 2 இடங்களில் எதிர்த்து களமிறங்கியுள்ளன.

ஒரு தொகுதியில் பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும், ஒரு தொகுதியில் பாமக – விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

பாஜக– இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் மோதுகின்றன.

சென்னையை பொறுத்தவரை மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 9ல் திமுக-அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 178 இடங்களில் போட்டியிடுகிறது. அதிமுக சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால், 191 தொகுதிகளில் இரட்டை இலை சின்னம் களத்தில் உள்ளது.

திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கட்சிகளையும் சேர்த்தால், 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது.

அதிமுக யாருடன் எத்தனை தொகுதிகளில் போட்டி:

அதிமுக vs திமுக – 131 தொகுதிகளில் நேரடி போட்டி
அதிமுக vs காங்கிரஸ் – 15 தொகுதிகளில் போட்டி
அதிமுக vs மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 5 தொகுதிகளில் போட்டி
அதிமுக vs இந்திய கம்யூனிஸ்ட் – 5 தொகுதிகளில் போட்டி
அதிமுக vs விசிக – 5 தொகுதிகளில் போட்டி
அதிமுக vs மதிமுக – 6 தொகுதிகளில் போட்டி
அதிமுக vs கொமதேக – 3 தொகுதிகளில் போட்டி
அதிமுக vs முஸ்லிம் லீக் – 3 தொகுதிகளில் போட்டி
அதிமுக vs மமக – 2 தொகுதிகளில் போட்டி
அதிமுக vs தவாகா – 1 தொகுதியில் போட்டி
அதிமுக vs ஆதித்தமிழர் – 1 தொகுதியில் போட்டி
அதிமுக vs ஃபார்வார்டுபிளாக் – 1 தொகுதியில் போட்டி
அதிமுக vs ம.வி.க 1 தொகுதியில் போட்டி

திமுக யாருடன் எத்தனை தொகுதிகளில் போட்டி:

திமுக vs அதிமுக – 131 தொகுதிகளில் நேரடி போட்டி
திமுக vs பாமக – 18 தொகுதிகளில் போட்டி
திமுக vs பாஜக – 14 தொகுதிகளில் போட்டி
திமுக vs தமாகா – 4 தொகுதிகளில் போட்டி
திமுக vs பெருந்தலைவர் மக்கள் கட்சி -1 தொகுதியில் போட்டி
திமுக vs புரட்சி பாரதம் – 1 தொகுதியில் போட்டி
திமுக vs தமமுக – 1 தொகுதியில் போட்டி
திமுக vs மூவேந்தர் முன்னேற்ற கழகம் – 1 தொகுதியில் போட்டி
திமுக vs மூவேந்தர் முன்னணி – 1 தொகுதியில் போட்டி
திமுக vs பசும்பொன் தேசிய கழகம் – 1 தொகுதியில் போட்டி

பிற கட்சிகள்:

காங்கிரஸ் vs பாஜக – 5 தொகுதிகளில் போட்டி
காங்கிரஸ் vs பாமக – 3 தொகுதிகளில் போட்டி
காங்கிரஸ் vs தமாகா – 2 தொகுதிகளில் போட்டி
பாமக vs மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1 தொகுதியில் போட்டி
பாமக vs விசிக – 1 தொகுதியில் போட்டி
பாஜக vs இ.கம்யூனிஸ்ட் – 1 தொகுதியில் போட்டி

சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 9ல் திமுக-அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர். இதேபோல் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேரடி போட்டி நிலவுகிறது.

திமுக அதிகபட்சமாக திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,05,000 கன அடியாக அதிகரிப்பு

Arivazhagan Chinnasamy

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி

Vandhana

திரைப்படத்துறையில் ஒரே தேசம், ஒரே வரி வேண்டும்: டி.ராஜேந்தர்

Arivazhagan Chinnasamy