முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத்
தலைவி படத்தின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவரவிருக்கிறார்
இயக்குநர் விஜய்.

இப்படத்தின் முன்னோட்டம் மார்ச் 23-ம் தேதியன்று வெளிவரவிருக்கும்
நிலையில் இப்படத்தின் நாயகி கங்கனா ரணாவத் இப்படத்தில் அவர் செய்த
பயணத்தையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
பகிர்ந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் இப்படத்திற்காகத் தன் உடல் எடையை 20 கிலோ அதிகரித்ததாகவும் சில மாதங்களிலேயே அதனைக் குறைத்ததாகவும் பதிவிட்டிருந்தார். மேலும் அவர் வெளியிட்டிருந்த புகப்படங்களின் தலைப்பில் ”ஜெயலலிதா அவர்கள் திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் தனித்துவமாக நின்றார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படத்தில் தமிழ்த் திரைப்பட நடிகர் அரவிந்த் சுவாமி மருதூர் கோபால ராமச்சந்திரனாக (எம்.ஜி.ஆர்) நடித்திருக்கிறார். மேலும் இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 23-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கிறது என்று தலைவி படக்குழு தகவல்
தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாமக தனித்து போட்டி; 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்

Halley Karthik

’முடியல.. எனக்கும் கொஞ்சம் கொடு’ பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்குகள்!

EZHILARASAN D

தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?

Vandhana