திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடு

திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான, திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு வாக்காளர்கள் தயாராகி…

திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான, திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு வாக்காளர்கள் தயாராகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தின் மாண்பினை அடிப்படையாகக் கொண்டு, திமுகவின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக மக்களின் விடியலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வருகிற 11ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்த அவர், 2006ஆம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி கூறியது போல, தற்போதைய தேர்தல் அறிக்கையும் கதாநாயகனாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.