தவெக சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா – விஜய் பங்கேற்பு!

தவெக சார்பில் நாளை மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படுகிறது.

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிச.25ம் தேதி உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒருசில தினங்களே இருப்பதால் மக்கள் தீவிரமாக ரெடி ஆகி வருகின்றனர். புது ஆடைகள், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவை வாங்க தொடங்கியுள்ளதால் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.

https://x.com/TVKPartyHQ/status/2002599779684290875

இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, நாளை (22.12.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகோதர சகோதரிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்”

இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.