முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோ இணைந்து வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 • ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீடுகளுக்கே நேரிடையாகச் சென்று வழங்கப்படும்.
 • அனைவருக்கும் அம்மா வாஷிங்மிஷின் திட்டத்தில் வாஷிங்மிஷின்கள் வழங்கப்படும்.
 • அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா இல்லம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
 • மாணவர்களுக்கு ஆண்டும் முழவதும் 2ஜி இணையம் சேவை இலவசமாக வழங்கப்படும்.
 • பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • அனைத்து இல்லங்களிலும் கட்டணமில்லா அரசு கேபிள் சேவை வழங்கப்படும்.
 • ஆண்டுக்கு வீட்டிற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
 • வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும்.
 • ஓய்வூதியம் 1,500 இல் இருந்து 2,000 ஆக உயர்த்தப்படும்.
 • UPSC, NEET, IIT-JEE, TNPSC போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும்.
 • முதல்வர் விவசாயி கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
 • தூய்மை பணியாளர் ஊதியம் 6,000 ஆக அதிகரிக்கப்படும்.
 • ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 • மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ. 1,500இல் இருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும்.
 • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயர் சூட்டப்படும்.
 • பெண் குழந்தை திட்டம் -நிதியுதவி உயர்வு; வங்கி அட்டை வழங்கும் திட்டம்: சிஏஏ சட்டத்தை கைவிட வலியுறுத்தல்.
 • குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ. 1,500 குடும்பத்தலைவியிடம் வழங்கப்படும்.
 • உயர்நீதிமன்றம் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்.
 • மாணவர்கள் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
 • முதியோர் பென்ஷன் ரூ. 2,000ஆக உயர்த்தப்படும்.
 • முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்களுக்கு வீடுகட்ட மனைகள் வழங்கப்படும்.
 • சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
 • நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் 50 சதவீதம் கட்டணச்சலுகை வழங்கப்படும்.
 • ஆட்டோ ஓட்டுநர் உரிமம் உரிமம் பெற்ற ஆண், பெண் ஓட்டுநர்களுக்கு ரூ. 25,000 மானிய விலையில் (e-Auto) வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
 • தமிழ்நாட்டில் படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும்.
 • 18 வயது நிரம்பியோர் அனைவருக்கும் கட்டணமில்லா இருசக்கர வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
 • பொதுப்பட்டியலில் உள்ள கல்வியினை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
 • மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.
 • நம்மாழ்வாரின் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும்.
 • தமிழகம் முழுவதும் பனை மரம் நட்டு வளர்க்கப்படும்.
 • சூரிய சக்தி மின் மோட்டார் பம்புகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்படும்.
 • இஸ்ரேல் நாட்டு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து வறண்ட நில விவசாய ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்தப்படும்.
 • தமிழ்நாட்டில் மேலும் ஐந்து புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.
 • 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம், 150 நாட்களாக விரிவாக்கப்படும்.
 • இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு செல்ல வழங்கப்படும் மானியம் 6 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
 • இந்து ஆன்மீக பயணம் மேற்கொள்வோருக்கு பயணச்சலுகைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.
 • உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி கச்சத்தீவை மீட்போம்.
 • கோயிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
 • பட்டியலின மக்கள் மதம் மாறினால் அவர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளையும் தொடர்ந்து அவர்கள் பெற்றிட மத்தய அரசிடம் வலியுறுத்தப்படும்.
 • படுகர், குருவிக்காரர், லம்பாடி, வேட்டைக்காரர், நரிக்குறவர் ஆகிய இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
 • ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்ளும் ஆயிரம் பேருக்கு ரூ. 37,000 வழங்கும் திட்டத்தில் யாத்திரிகர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும்.
 • கோயிகள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் பழுதடைந்த இருப்பின் தேவையான நிதி ஒதுக்கி செப்பனிடப்பட்டு புனரமைப்பு செய்யப்படும்.
 • வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்க தமிழ்நாடு அரசு தனத்துறை அமைகத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யார் இந்த கேப்டன் மில்லர்?

Web Editor

ஜூலை 10இல் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor

புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!

எல்.ரேணுகாதேவி