தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இதுவரை 34, 87,36 நபர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையால் 95 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த ஏப்ரல் 14 முதல் 16-ம் தேதி வரை மாவட்டங்களில் தடுப்பூசி முகாமை திருவிழா போல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தொற்றை கருத்தில் கொண்டு ஏற்கனவே உள்ள ஊரடங்கை நீட்டித்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு அரசின் முயற்சி பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்குடன் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என இதனை தவிர்க்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்