மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இன்றைய போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளது.
இந்நிலையில், மும்பை அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து போட்டிக்கு முன் இந்த சிரிப்பு எனக்கு மிகவும் அவசியமானது என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







